இன்று தொடங்கிய 2025ம் ஆண்டை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: இன்று தொடங்கிய 2025ம் ஆண்டினை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம். ஆயுதப் படைகளை தொழில்நுட்ப ரீதியாக மாற்றும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 21ம் நூற்றாண்டின் சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்த பாதுகாப்பு துறை தயாராகிறது. பல சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பு துறை முன்னோடியாக திகழ்கிறது.
தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பு துறை தயாராகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும். எதிர்காலப் போர்களில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து வேலைகளும் செய்யப்படும். பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில், இந்தியா வளர்ச்சி அடையும். படைவீரர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, அவர்களின் நலனை உறுதிப்படுத்துவோம். படைவீரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |