‘எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின், இந்தூரில் இந்திய ராணுவ வீரர்களிடம், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களை கூர்மையாக கண்காணிக்க வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும். பாதுகாப்பு சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டால் பாரதம் மிகவும் அதிர்ஷ்டமான நாடு அல்ல. வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறோம். நாம் அமைதியாக, அக்கறையின்றி இருக்க முடியாது.
நமது எதிரிகள், உள் அல்லது வெளிப்புறமாக இருந்தாலும், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இந்த சூழ்நிலைகளில், அவர்களின் செயல்பாடுகளை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில், ‘எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
2047ம் ஆண்டிற்குள் பாரதத்தை வளர்ந்த மற்றும் தன்னிறைவு கொண்ட நாடாக மாற்ற வேண்டும். இதற்கு, ராணுவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. வேலையின் மீதான உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை மிகவும் முக்கியம். இது நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |