ஜாதியின் பெயரால் விஷத்தை விதைக்கும் எதிர்க்கட்சிகள் – மோடி குற்றச்சாட்டு

”நாட்டில் ஒவ்வொருவரும் வளர்ச்சியின் பலனை அனுபவித்து, வளர்ந்த நாட்டை உருவாக்க உழைக்கும் நேரத்தில், ஜாதியின் பெயரால் சிலர் விஷத்தை விதைக்க பார்க்கின்றனர்.

”இந்த சதியை முறியடித்து, நம் கிராமங்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பேணி காத்து, வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்டுவோம்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

கிராமங்களின் பாரம்பரியம், கலாசாரம், தொழில் வளர்ச்சியை வெளிக்காட்டும் வகையில், ‘கிராமிய பாரத மஹோத்சவ்’ என்ற பெயரில், ஜன., 4 முதல் 9ம் தேதி வரை, நாடு முழுதும் திருவிழாக்களை நடத்துகிறது மத்திய அரசு.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், அவர்களது வருவாயை பெருக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கிராம மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதே இந்த அரசின் முன்னுரிமை; அதற்கேற்பவே பல திட்டங்கள், பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் வாயிலாக, கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதை தடுத்து வருகிறோம்.

அதற்காக, கிராமங்களில் பல புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.

ஆனால், ஜாதியின் பெயரால் மக்களை பிளவு படுத்தும் விஷத்தை சிலர் விதைத்து வருகின்றனர். இந்த சதித் திட்டத்தை முறியடித்து, நம் கிராமங்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கட்டிக் காக்க அனைவரும் ஒன்றிணைவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாட்டின் வளர்ச்சியில் கிராமங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், பயிலரங்குகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.

கிராமிய பாரத மஹோத்சவ் நிகழ்ச்சிகளை டில்லியில் நேற்று துவக்கி வைத்தார் பிரதமர் மோடி.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை விமர்சிக்கும் வகையில், அவர் பேசியதாவது:

கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்தே, கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த, 10 ஆண்டுகளாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், அவர்களது வருவாயை பெருக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கிராம மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதே இந்த அரசின் முன்னுரிமை; அதற்கேற்பவே பல திட்டங்கள், பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் வாயிலாக, கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதை தடுத்து வருகிறோம். அதற்காக, கிராமங்களில் பல புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். ஆனால், ஜாதியின் பெயரால் மக்களை பிளவு படுத்தும் விஷத்தை சிலர் விதைத்து வருகின்றனர். இந்த சதித் திட்டத்தை முறியடித்து, நம் கிராமங்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கட்டிக் காக்க அனைவரும் ஒன்றிணைவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு க ...

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்த ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உய ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது ? அண்ணாமலை கேள்வி 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ் ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றா ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...