முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் 'சி' யில் மூன்றில் ஒரு பங்கு கிடைத்துவிடும்.
சாலடுகளாகப் பயன்பத்துவதற்கு முட்டைக்கோசு மிகவும் ஏற்றது. பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடலாம். சாறு எடுத்துச் சாப்பிட்டால் தான் இதன் முழு மருத்துவப் பயனும் உடலில் சேரும்.
அல்சரை குணமாக்கும் தன்மை முட்டைக்கோசிற்கு உள்ளது. மேலும் இரும்புச் சத்து உள்ளதால் ரத்தச் சோகையைப் போக்கவும் பயன்படும்.
ஆர்த்ரிடிஷ், நரம்புத் தளர்ச்சி பயோரியா, செரிமானமின்மை, இரத்தச்சோகை, உடல் பருமன், பார்வைக் கோளாறு இவற்றுக்கு முட்டைக்கோசு சிறந்த மருந்தாகும்.
மேல்நாட்டுக் கீரை இனத்தைச் சேர்ந்தது. இப்போது நமது நாட்டில் குளிர்நாடுகளில் பயிரிடப்படுகிறது. இதில் ஏ,பி,சி என்னும் உயிர்ச் சத்துக்கள் உண்டு. சமைத்தால் இந்தச் சத்துக்கள் குறைந்துவிடுகின்றன. சமைக்காமல் மேல்பக்கமுள்ள பச்சை இலையைத் தின்றால் உயிர்ச் சத்துக்களை அதிகமாகப் பெறலாம்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.