சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை

‘சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன’ என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சட்டசபையில், 6ம் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ரவி, தேசிய கீதம் பாட வலியுறுத்தினார். சபையில், அ.தி.மு.க., – காங்., எம்.எல்.ஏ.,க்கள், அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக, கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

தேசிய கீதம் பாடப்படாத நிலையில், சபையில் இருந்து கவர்னர் வெளியேறினார். ‘கவர்னரின் செயல் சிறுபிள்ளைத்தனம்’ என, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். ‘இத்தகைய ஆணவம் நல்லதல்ல’ என, முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் நேற்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று (ஜன.,13) ஓசூரில் நடந்த வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. 60 ஆண்டுகளாக இரவும், பகலும் சமூக நீதி பேசும் தமிழகத்தில் தொடர்ந்து தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள்.

சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன. இன்றளவும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும். வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது. சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர். ஆனால் வள்ளலார் மீட்டார். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...