பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன்

”பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது; எந்த மாநிலத்தையும் மத்திய அரசு புறக்கணிக்கவில்லை,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் கூறினார்.

ராஜ்யசபாவில் நேற்று தி.மு.க., – எம்.பி.,க்கள், ‘மத்திய பட்ஜெட்டில், பா.ஜ., ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன’ என, குறிப்பிட்டனர். ”இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் இல்லாதது,” என தமிழில் பதிலளித்த அமைச்சர் நிர்மலா கூறியதாவது:

மத்திய பட்ஜெட்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பா.ஜ., ஆளாத மாநிலங்களை புறக்கணிக்கவில்லை.

புறக்கணித்ததாக கூறுவது அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு. அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் மறுக்கிறேன். பட்ஜெட் தயாரிப்பின் போது, அனைத்து மாநிலங்களின் கருத்தும் கேட்டறியப்பட்டது.

இந்த பட்ஜெட், பீஹார் மாநிலத்திற்கு மட்டுமான பட்ஜெட் இல்லை; எல்லா மாநிலங்களுக்குமான பட்ஜெட். பஞ்சாப், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கும் இந்த பட்ஜெட்டில் பல உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனுமதியை வழங்கியது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான தடையை விலக்கியது, மத்திய அரசு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...