இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் 80 ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் மே 9ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாபெரும் ராணுவ பேரணி நடைபெற இருக்கிறது. இந்தப் பேரணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், ராணுவ வீரர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
அந்த வகையில், இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக ரஷ்யா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிவப்பு சதுக்கத்தில் நடக்கும் பேரணியில் இந்திய ராணுவமும் கலந்து கொள்ள இருப்பதாக ரஷ்ய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணிக்காக பயிற்சி மேற்கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே இந்திய ராணுவம் ரஷ்யா செல்ல இருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா சென்றது குறிப்பிடத்தக்கது.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |