குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார்

டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியன்டோ இந்தியா வந்தார்.

வரும் 26ம் தேதி தலைநகர் டில்லியில் நாட்டின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கொண்டாட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று, முதல்முறையாக 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

அதன்படி, டில்லி விமான நிலையம் வந்தடைந்த இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோவை மத்திய அமைச்சர் பபித்ரா மர்ஹெரிட்டா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இன்று மாலை தாஜ் ஓட்டலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து, ராஷ்டிரிய பவனில் நாளை (ஜன.,25) காலை 10 மணிக்கு நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ பங்கேற்கிறார்.

இந்திய சுற்றுப்பயணம் குறித்து இந்தோனேசிய அதிபர் கூறுகையில், ‘இந்தியாவின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றேன். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடியை சந்திக்கிறேன். அப்போது, பாதுகாப்பு, கடல்சார் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்த உள்ளேன்’, என்றார்.

இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ மலேசியா புறப்பட்டு செல்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...