தமிழ் மொழியை வியாபாரமாக பயன்படுத்தும் திமுக

தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தி.மு.க., தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: திருவள்ளூரில், தி.மு.க., அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, தி.மு.க., நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தி.மு.க., தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதல்வர் ஸ்டாலின்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து இந்திய நிலைகளை பாதுகாத்த ஆகாஷ் ஏவுகணை இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட ஆகாஷ் ...

இறையாண்மையை காப்போம் இந்திய ரா� ...

இறையாண்மையை காப்போம் இந்திய ராணுவம் உறுதி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது குறித்து, இந்திய ராணுவம் ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குத� ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந� ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம் நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை ...

முப்படைகளை களமிறக்கியது இந்தி� ...

முப்படைகளை களமிறக்கியது இந்தியா அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம் பாகிஸ்தான் நேற்று இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்க ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...