10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் திட்டத்தை மாற்றவில்லை – அண்ணாமலை

10 ஆண்டுகளாக அரசுப் பள்ளிக்கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று காங். எம்.பி., சசிகாந்த் செந்திலுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தமது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் மும்மொழிக் கொள்கை என்பது மொழி திணிப்பு, கலாசார ஒழிப்பு என்று விமர்சித்து இருந்தார். இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை காட்டமாக பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை;

ஹிந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாகத் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். நேற்று நீங்கள் காணொளியில் கூறிய பொய்யையே மீண்டும் எழுத்து வடிவில் கூறுவதால் அது உண்மையாகி விடாது.

நகர்ப்புற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவது தானே நியாயமான சமூக நீதி. பத்து வருடமாக அரசுப் பள்ளிக் கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று கூற உங்களுக்கும் வெட்கமில்லை. உங்கள் கூட்டணிக் கட்சி தி.மு.க.,வுக்கும் வெட்கமில்லை. இன்னும் எத்தனை ஆண்டு காலம், திராவிடத்தின் பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் பாடமாகப் படிக்க வேண்டும்?

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகன் தொடங்கி, அனைத்து தி.மு.க.,வினர் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் நலனுக்காக, ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தாமல், இரட்டை வேடம் போட்டு, அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க.,வைக் கேள்வி கேட்க எது தடுக்கிறது? அவர்கள் தயவால் பெற்ற பதவியா?

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து இந்திய நிலைகளை பாதுகாத்த ஆகாஷ் ஏவுகணை இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட ஆகாஷ் ...

இறையாண்மையை காப்போம் இந்திய ரா� ...

இறையாண்மையை காப்போம் இந்திய ராணுவம் உறுதி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது குறித்து, இந்திய ராணுவம் ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குத� ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந� ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம் நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை ...

முப்படைகளை களமிறக்கியது இந்தி� ...

முப்படைகளை களமிறக்கியது இந்தியா அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம் பாகிஸ்தான் நேற்று இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்க ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...