கிர் வனவிலங்கு சரணாலயம் சென்ற பிரதமர் மோடி அங்கு சிங்கங்களை மிக அருகில் பார்க்கும் லயன் சபாரி மேற்கொண்டு கேமராவில் அவற்றை படம் பிடித்தார்.
குஜராத் மாநிலத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (மார்ச். 3) சர்வதேச வனவிலங்கு நாள் என்பதால் அங்குள்ள கிர் தேசிய வனவிலங்கு சரணாலயம் சென்றார்.
உலக நாடுகளில் ஆசிய சிங்கங்களின் ஒரே வாழ்விடம் என்ற பெருமையை பெற்றுள்ள கிர் சரணாலயத்தில் வனவிலங்குகளை அருகில் இருந்து பார்த்து ரசிக்கும் லயன் சவாரி (Lion safari) என்ற பயணத்தை மேற்கொண்டார்.
அதற்காக அவர் திறந்தவெளி ஜீப்பில் சென்றார். கேமரா மூலம், வனவிலங்கு சரணாலயத்தில் நடமாடிய சிங்கத்தை போட்டோ எடுத்து மகிழ்ந்தார். கேமராவில் க்ளிக்கிய போட்டோக்களை பிரதமர் மோடி, தமது எக்ஸ் தள வலை பக்கத்தில் பதிவிட்டு கூறி உள்ளதாவது;
இன்று உலக வனவிலங்கு நாள் என்பதால் கம்பீரமான ஆசிய சிங்கங்களின் தாயகம் கிர் வனப்பகுதியில் லயன் சபாரி சென்றேன். நான் குஜராத் முதல்வராக இருந்து இங்கே வந்த போது செய்த பல பணிகள் இப்போது நினைவுக்கு வருகிறது.
கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், சிங்கங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை உறுதி செய்ய முடிகிறது. ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர், அவர்களை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களின் பங்கு பாராட்டத்தக்கது.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |