தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, ஆணையத்தால் நியமிக்கப்படும் புதிய முகமையிடம் சுங்கச்சாவடிகளை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை வலுப்படுத்த முன்னெப்போதும் இல்லாத வகையில், சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலில் முறைகேடாக ஈடுபட்ட 14 முகமைகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அட்ராய்லா ஷிவ் குலாம் சுங்கச்சாவடியில் உ.பி சிறப்பு பணிக்குழு சோதனை நடத்தியது. முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தவறிழைத்த முகமைகளுக்கு ‘விளக்கம் கேட்டு நோட்டீஸ்களை’ வழங்கியது.
கட்டண வசூல் நிறுவனங்கள் சமர்ப்பித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. ஒப்பந்தத்தின் விதிகளை மீறியதற்காக முகமைகள் இரண்டு வருட காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தை மீறியதற்காக ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ‘செயல்திறன் பத்திரங்கள்’ (Performance Securities) பறிமுதல் செய்யப்பட்டு பணமாக்கப்பட்டு வருகின்றன.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |