மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள், குடும்ப பென்ஷன்தாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. கடந்த ஜூலையில் 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது, அதை மேலும் 2 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அகவிலைப்படியை அதிகரிக்க, டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது, கடந்த ஜன., 1 முதல் கணக்கிடப்படும். ஏப்ரல் மாத சம்பளத்தில் கூடுதல் அகவிலைப்படியும், ஜன., பிப்., மார்ச் ஆகிய மூன்று மாத நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.

இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 6,614 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். 48.66 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 66.55 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயனடைவர். ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் இது வழங்கப்படுகிறது.

விவசாயிகளின் நலனை கருத்தில் வைத்து, கோடைக்கால காரீப் பருவ விவசாயப் பணிகளுக்காக பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு, 37,216 கோடி ரூபாய் மானியம் வழங்கவும், பீஹாரில் கிழக்கு கோசி கால்வாய் சீரமைப்பு மற்றும் மகாநந்தா படுகை நீர்ப்பாசன திட்டத்துக்கு மத்திய அரசின் பங்காக 3,652.56 கோடி ரூபாய் வழங்கவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டின் மின்னணு உற்பத்தி 5 மடங்கு அதிகரித்து, 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது. மின்னணு பொருட்களின் ஏற்றுமதியும் 6 மடங்கு அதிகரித்து, 2.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, குறைகடத்தி அல்லாத மின்னணு சாதன உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு 22,919 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது, இந்த துறையில வேலை வாய்ப்பை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...