மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.
நீரிழிவு நோய் நீங்க
மாம்பூக்கள் 20கிராம், நாவற் பழக்கொட்டை 20 கிராம், மாந்தளிர் 20 கிராம் இவை அனைத்தையும் வெயிலில் காய வைத்து, இதை எடுத்துத் தூளாக்கி வைத்துக்கொண்டு தினமும் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலக்கி அருந்த வேண்டும். இவ்வாறு 1 மண்டலம் (4௦) நாள் தொடர்ந்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
பல் நோய் குணமாக
தேவையான மாம்பூக்களையும், மாந்தளிரையும் பறித்து நீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரில் வாயைக் கொப்பளித்தால் நாளடைவில் பல் சம்மந்தமான நோய்கள் நீங்கும்.
மூல நோய் நீங்க
மாம்பூவுடன் சீரகத்தையும் சேர்த்து இடித்துப் பொடியாக்கிச் சலித்து, சலித்த தூளில் 2 சிட்டிகை எடுத்துச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிடலாம்; அல்லது தயிரில் கலந்தாவது சாப்பிடலாம். இதன் மூலம் நாளடைவில் மூல நோயும், உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்களும் நீங்கும்.
தொண்டை கம்மல் நிற்க
மாம்பூ கஷாயத்துடன் தேனும், எலுமிச்சம்பழச் சாறும் விட்டுக் கலந்து வாயில் ஊற்றித் தொண்டை நனையக் கொப்பளித்தால் போதும்; நாளடைவில் தொண்டை கம்மல் நீங்கி விடும்.
கொசு நீங்க
மாம்பூவை அதிக அளவில் எடுத்துக் காயவைத்துத் தூள் செய்து, அத்தூளைப் புகையிடக் கொசுக்கள் நீங்கிவிடும்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.