விவசாயிகளுக்கு பெரும் பலனளிக்கும் வகையில், டி.ஏ.பி., எனப்படும் டை அமோனியம் பாஸ்பேட் உரத்தை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக மத்திய அரசு 3,850 கோடி ரூபாய் ஒதுக்கிஉள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், விவசாயிகள் நலன் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:
விவசாயிகளுக்கு 2014 – 2024 காலகட்டத்தில், 11.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உர மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய 2004 – 2014 காலகட்டத்தில், 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே மானியம் வழங்கப்பட்டது.
விவசாயிகள் பெருமளவு பயன்படுத்தும் டி.ஏ.பி., உரத்துக்கு, 1 டன்னுக்கு 3,500 ரூபாய் என்ற அளவுக்கு கூடுதல் மானியத்தை மத்திய அரசு அறிவித்தது. இது, கடந்தாண்டு ஏப்., 1 முதல் டிச., 31 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. உரத்தின் விலையை கட்டுப்படுத்த, 2,625 கோடி ரூபாய் அளவுக்கு மானியம் அளிக்கப்பட்டது.
என்.பி.எஸ்., எனப்படும் ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட உரத்துக்கான மானியத்தைத் தவிர, இந்த மானியமும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
இந்த ஒரு முறை மானிய திட்டம் நீட்டிக்கப்படுகிறது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை இது நடைமுறையில் இருக்கும். இதற்காக, கூடுதலாக செலவாகும் 3,850 கோடி ரூபாயை ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச அளவில் இந்த உரத்தின் விலை உயர்ந்துள்ள நிலையிலும், விவசாயிகளுக்கு நிதிச் சுமை ஏற்படாமல் இருக்க, மானியத்தை தொடர அரசு முன்வந்துள்ளது. இதன் வாயிலாக, 50 கிலோ மூட்டை அளவுள்ள டி.ஏ.பி., உரம், 1,350 ரூபாய்க்கு கிடைக்கும்.
புதிய ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தவும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டம், 2021 – 2022 நிதியாண்டில் இருந்து 2024 – 2025 வரையிலான காலத்துக்கு ஏற்கனவே, 66,550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
விவசாயிகளின் பெரும் ஆதரவு மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் பலன்களை கருத்தில் கொண்டு இந்த திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதற்கான மொத்த ஒதுக்கீடு, 69,515 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
வேளாண் துறையில் தொழில்நுட்ப வசதிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்காக, 824 கோடி ரூபாய் ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |