”தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் டிவிக்கு நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: கூட்டணிக்கு இன்னும் கட்சிகளை எதிர்பார்க்கிறோம். அதாவது தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மாற்று அரசாங்கம் வேண்டும். இதற்காக எந்த கட்சிகள் வந்தாலும் கூட்டணிக்கு சேர்த்து கொள்வோம். எல்லோரும் வர வேண்டும்.
தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சி வர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஏன் முடியாது? மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன. சீமானை நான் கூட்டணிக்கு அழைக்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |