கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ்

கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, இந்திய அரசு வேவ்ஸ் 2025 குறித்த உயர்மட்ட அமர்வை இன்று புது டில்லியின் சாணக்கியபுரியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடத்தியது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, 2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெற உள்ள உலக ஆடியோ காட்சி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (வேவ்ஸ்) 2025க்கு முன்னதாக நடந்தது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டி:

படைப்பாளிகள் பொருளாதாரத்திற்காக ரூ.8,600 கோடி நிதி உருவாக்கப்படும். இந்திய அரசு ஒரு புரட்சிகரமான முன்முயற்சியை அறிவித்துள்ளது. இது அனைத்து ஆற்றல்மிக்க படைப்பாளிகளும் முதலீட்டை அணுகுவதையும், அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதையும், உலக சந்தையை அடைவதையும் உறுதி செய்யும்.

இந்த நிதி, உள்ளடக்க உருவாக்குநர்கள், கலைஞர்கள் மற்றும் புதுமைப்பித்தர்களுக்கு நிதி ஆதரவு, உள்கட்டமைப்பு மற்றும் வளங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் படைப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சி, இந்தியாவை உலகளாவிய படைப்பு மற்றும் புதுமை மையமாக நிலைநாட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் மற்றும் படைப்புத் தொழில்களில் தொழில்முனைவோர் மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கும்.

‘கிரியேட் இன் இந்தியா’ நிதி, டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், கேமிங், அனிமேஷன், திரைப்பட தயாரிப்பு மற்றும் பிற படைப்புத் துறைகளில் கவனம் செலுத்தும். இது இந்தியாவின் மென்மையான சக்தி மற்றும் கலாசார ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் அரசின் பார்வையுடன் இணைந்து, உள்ளூர் திறமைகளை உலகளாவிய மேடையில் வெற்றிகரமாக முன்னேற்றும். இந்த நடவடிக்கை,

இந்தியாவின் படைப்புத் திறனை உலகிற்கு காண்பிக்கும். மேலும் இந்தியாவில் படைப்பாற்றல் திறமைகளை அடையாளம் கண்டு வளர்க்கும் நோக்கில், மும்பையின் கோரேகான் திரைப்பட நகரத்தில் அமைக்கப்படவுள்ள நாட்டின் முதல் படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ரூ.391 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...