ராஜாவினால் தமிழகத்தினுடைய பெயர் கெட்டு விட்டது, என்று பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் ஸ்மிருதி-இரானி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று பாரதிய ஜனதா மகளிர் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது . இதில் தமிழகத்திலுருந்து ஏராளமான மகளிர்-அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் தேசிய மகளிர் அணி தலைவர் ஸ்மிருதிஇரானி அளித்த பேட்டி: பல்வேறு புலவர்களையும், ஞானிகளையும் பெற்று சிறப்பான நிலையில் இருந்த தமிழகத்தின் பெயர், இன்று அலைவரிசை ஒதுக்கீட்டில் ராஜாசெய்த ஊழலால் தேவையின்றி கெட்டு போயுள்ளது. இந்த ஊழலின் மூலம், முதல்வரின் மகளும் பலன் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை ஜெ.பி.சி., விசாரணைக்கு உட்படுத்தாமல், நீர்த்து போகச் செய்வதற்கான பணிகளில், மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார். பா.ஜ., மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.