அந்நிய தேசத்துக்கு கொள்ளை போகும் செல்வம் வரலாறு திரும்புகிறது

 சுதந்திரப்போராட்ட காலம் அது; அக்காலத்தில் நாடெங்கும் மேடைகள் போட்டு ஆங்கிலேய ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும். அவர்களை இந்திய நாட்டை விட்டு விரட்ட வேண்டும் எனப்பேச்சாளர்கள் வீர முழக்கமிட்டுப் பேசி வந்த காலம்.

ஒரு மேடையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையும்,அவரோடு விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவும் அமர்ந்திருக்கிறார்கள்.அப்போது ஒருபேச்சாளர், "வெள்ளைக்காரர்களை மூட்டை முடிச்சுகளோடு இந்தநாட்டை விட்டே விரட்ட வேண்டும்"வ.உ.சிதம்பரம் பிள்ளை என ஆவேசமாக தனது பேச்சினூடே தெரிவித்தார்.

அவரது பேச்சை இடைமறித்து சுப்பிரமணிய சிவா எழுந்து, "இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்"என்றார்.இதனால்,மேடையில் இருந்தவர்களும்,பேச்சாளரும் கூட்டத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானவர்களும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார்கள்.

சுப்பிரமணிய சிவா தொடர்ந்து பேசினார். 'வெள்ளைக்காரர்களை மூட்டைமுடிச்சுக்களோடு இந்த நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்று நண்பர் கூறினார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மூட்டை முடிச்சுகள் நம்முடையவை! வெள்ளைக்காரர்களை வெறும் பயல்களாகத் தான் நாட்டை  சுப்பிரமணிய சிவாவிட்டு விரட்ட வேண்டும்' என்று கூறினார்.இதைக் கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் உற்சாக ஆரவாரம் செய்து "வந்தே மாதரம்" என வீரமுழக்கம் இட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகியும்,வரலாறு திரும்புகிறது இல்லையா? இது தான் ஆச்சரியம் நிறைந்த கொடுமை!

நன்றி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...