“தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்றார் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் இது சாதாரணமான வார்த்தை ஜாலமன்று, பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியங்களை கொண்ட பாரதத்தின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வேத, இதிகாச, புராணங்களின் தத்துவியலாகும். பரந்துபட்ட பாரதம் எத்தனையோ சிற்றரசர்களால் ஆளப்பட்ட போதிலும், மக்கள் அரசனை மதித்தனர், தேசபற்றின் அடையாளமாக மண்ணையும், அரசின் கொடிதனையும் வணங்கினர்.
இதன் நீட்சியாக தான் அந்நியனின் அடிமைத்தனத்திலிருந்து தேசத்தை மீட்டெடுக்க பாரத அன்னை உருப்பெற்றால். 1873இல் கிரண் சந்திர பானர்ஜியால் சுதந்திர தாகத்தை தூண்டும் பாரத் மாதா நாடகம் அரங்கேற்ற பட்டது. பாரத அன்னையை போற்றிடும் வந்தே மாதரம் பாடல் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் 1882இல் இயற்றப்பட்டது. பிபின் சந்திர பால் பண்பாட்டு வழக்கங்களுடன் இதன் உருவகத்தை ஒருங்கிணைத்து தேசியத்தை அடையாளப்படுத்தினார்.
பாரத மாதா தோற்றமும், வந்தே மாதர முழக்கமும், சுதந்திரப் போராட்ட வேட்கைக்கு உரமிட்டன. சுப்ரமணிய சிவா சேலம் பாப்பாரப்பட்டியில் சித்தரஞ்சன் தாஸ் முன்னிலையில் பாரதமாதா ஆலயத்துக்கு 1923ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். ஆனால் அதற்காக அன்று ஆங்கிலேயன் கொடுத்த நெருக்கடிகள் ஏராளம் என்றால்!. சுதந்திர பாரதத்தில் தமிழகத்தில் அதேபோன்றொரு நிகழ்வு தொடர்வது கேவலம்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு மரியாதை செய்ய சென்ற பாஜக நிர்வாகிகள் தடுக்கப்பட்டதே சமீபத்திய சான்று. பூட்டப்பட்ட மண்டபத்தினை திறக்க மறுத்ததால். பாஜக.,வின் கே.பி ராமலிங்கம் தலைமையிலான தொண்டர் படை பூட்டுடைத்து தரிசித்துள்ளது. அவர்கள் எதையும் திருட வில்லை, கொள்ளையடிக்க போகவில்லை, சேதப்படுத்த செல்லவில்லை. குறிப்பாக பூட்டுடைத்து பாரத அன்னைக்கு மீண்டும் ஒரு சுதந்திரத்தையே பரிசளித்தனர்.
சுப்பிரமணிய சிவாவே நேரில் வந்திருந்தாலும் இதையேதான் செய்திருப்பார். ஆனால் கே.பி ராமலிங்கம் போன்றோர் கைது செய்யப்பட்டு ஒரு வார சிறைக்கு பின்னேதான் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர். தேச பற்றில் முரட்டுத்தனம் இருந்திருக்கலாம் அதை ரசியுங்கள். தேச பற்றே வேண்டாம் என்று முரண்டு பிடிப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செயகிறார்கள் அவர்களை பிடியுங்கள். கே.பி.,ராமலிங்கம் போன்றதொரு நவீனகால சுப்ரமணிய சிவாக்கல் இருக்கும் வரை பாரத தேசம் மங்கா புகழுடன் என்றும் நிலைத்திருக்கும் என்பதே நிதர்சனம்.
நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |