வாக்குப்பதிவுக்கும் , வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்டஇடைவெளி விடுவதை பற்றி தேர்தல் ஆணையம் பரிசிலிக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தின் முடிவினை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; குஜராத் சட்ட சபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்துள்ளது . அதற்கு முன்னபு நவம்பர் 3ம் தேதி இமாச்சல பிரதேச சட்ட சபை தேர்தல் நடந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவானவாக்குகள் வரும் 20-ம் தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது . இப்படி வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்டஇடைவெளி விடுவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசிலிக்க வேண்டும்.
குஜராத்தை பொறுத்த வரை தேர்தல் முடிவிற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் வாக்குப்பதிவு முடிந்து 2 நாட்கல் தான் ஆகிறது . ஆனால், இமாச்சல பிரதேச வாக்காளர்கள் வேட்பாளர்களை பற்றித் தான் நான் கவலைப் படுகிறேன். அவர்கள் வாக்களித்து விட்டு நீண்டகாலம் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தின் முடிவினை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை. இதை ஒருபகுதியாக தேர்தல் ஆணையம் பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.