பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் வரும் நாளை மறுநாள் (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறஉள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி நாடுமுழுவதும் முதல் கட்டமாக நாளைமறுநாள் முதல்கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.
இந்நிலையில் தேர்தல் முதற்கட்டவாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து பா.ஜனதா மற்றும் தேசியஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக அந்த கடிதத்தில், இதுசாதாரண தேர்தல் அல்ல, மக்களின் ஆசீர்வாதத்துடன், பா.ஜனதா மற்றும் தேசியஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்குஇருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, வேட்பாளர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் வாழ்த்தியுள்ளார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |