தில்லி மாணவி பலாத்காரம் செய்ய பட்டது மட்டும் மக்களின் கொந்தளிப்புக்கு காரணம் அல்ல என பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார் :
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; சிலகாலமாக சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு வருவதை சரி செய்ய அரசு தவறியதன் காரணமாக மக்களிடையே உருவான கோபம் தான் தில்லியில் மாணவி பலாத்காரம்செய்யப்பட்ட சம்பவத்தின் மூலமாக கொந்தளிப்பாக வெளிப்பட்டுள்ளது . ஒருகுறிப்பிட்ட சம்பவத்தால் மட்டும் (தில்லி மாணவி பலாத்கார விவகாரம்) இது நிகழ்ந்து விடவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசின் செயல்பாடுகளால் நாடாளுமன்ற நடை முறைகளின் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நாடாளுமன்ற அமைப்புமுறையை அரசு அலட்சியப்படுத்துகிறது. பலாத்கார சம்பவம்தொடர்பாக குளிர் கால கூட்டத் தொடரில் பிரச்னையை எழுப்பினோம். ஆனால் கூட்டத் தொடர் முடிந்து ஒருவாரத்துக்குப் பிறகு பிரதமர் அறிக்கை வெளியிடுகிறார் என்றார்
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.