பாஜகவும் ஈஸ்டர் ஞாயிறும்

 பாஜகவும் ஈஸ்டர் ஞாயிறும் கிறித்துவருக்கு மிக முக்கியமான ஈஸ்டர் பண்டிகை சென்ற மார்ச் 31- ம் தேதி ஞாயிறன்று கொண்டாடப்பட்ட்து. மற்றெல்லாக் கிறித்துவப் பண்டிகைகளும் , கிரிகோரி பஞ்சாங்கத்தின்படி , ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாட்களில் கொண்டாடப்படும் ; ஆனல், ஈஸ்டர் மட்டும் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாட்களில் நிகழ்கிறது. உதாரணமாக, அடுத்த வருடம்( 2014) ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 20 அன்று கொண்டாடப்படும் .

1980-ல் தோன்றிய பாஜக உறுப்பினரான நமக்கு ஈஸ்டர் ஞாயிறு ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த்து. 1980-ல் ஈஸ்டர் ஞாயிறு ஏப்ரல் 6-ம் தேதி நிகழ்ந்த்து. அன்றுதான் புது தில்லியில் திரு அடல் பிஹாரி வாஜபேயீ பாரதிய ஜனதா கட்சியை துவக்கி வைத்தார்.

1975 ஜூன் மாதம் , அலஹாபாத் உயர்நீதி மன்றம் , சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் திரு ராஜ் நாராயண் தொடுத்த தேர்தல் வழக்கின் மீது தீர்ர்ப்பு சொன்னது. பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் லோக் சபா தேர்தல் வெற்றி செல்லாது, அவர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று கூறி, அவரை அடுத்த ஆறு வருடங்களுக்கு தேர்தல்களில் நிற்கக் கூடாது என்றும் தடை உத்தரவு இந்திரா காந்தி  விதித்தது

இந்தக் கடுமையான நிகழ்வைத் தொடர்ந்து, உள்நாட்டுக் குழப்பம் ஏற்படும் என்ம்று காரணம் காட்டி, காங்கிரஸ் அரசாங்கம் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தது. அரசியல் நிர்ணயச் சட்ட்த்தின்படி அளிக்கப்பட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் ரத்து செய்யப்பட்டன. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் போராளிகள் ஒரு லக்ஷம் பேருக்கு மேல் சிறை வைக்கப் பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இல்லாத அளவுக்கு ஊடகங்களின் மேல் அரசின் அடக்கு முறை திணிக்கப்பட்ட்து. இந்த அவசர நிலை 20 மாதங்களுக்கு நீடித்தது.
.
.மார்ச் 1977-ல் நடந்த அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், சுதந்திரத்திற்குப் பிறகு முதன் முதலாக , இந்திய வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சியை புது தில்லியில் அதிகாரத்தினின்றும் தூக்கி எறிந்தனர். அந்த நாளில், ஸ்தாபன காங்கிரஸின் தலைவரான ஸ்ரீ மொரார்ஜி தேசாய் , ஜனதா கட்சி அரசின் பிரதம மந்திரியானார்.

1952-ம் வருடம் முதல் ஒவ்வொரு பாராளுமற்றத் தேர்தலிலும் ஒரு பரப்புரையாளனாகவோ, அல்லது வேட்பாளனாகவோ நான் பங்கு பெற்றிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன் , 1977- ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் , இந்திய அரசியல் வரலாறில் ஒரு மிக் மிக முக்கியமான , திருப்புமுனையாக அமைந்தன என்று எவ்வித்த் தயக்கமுமில்லாமல் ,  மொர்ர்ஜி தேசாய் திட்டவட்டமாக்க் கூறுவேன். இந்திய ஜன்நாயகத்தின் வாழ்வே இந்த தேர்தல்களின் முடிவுகளை நம்பி இருந்த அளவுக்கு வேறெந்த சமயத்திலும் இருந்த்தில்லை. இந்த்த் தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால், இந்தியாவில் பல கட்சி ஜன்நாயக அமைப்பு என்பதை ஒரேயடியாக முடிவு கட்ட , கபடமாக்க் கொண்டு வந்த அவசரநிலை மக்களின் ஆதரவு பெற்றிருந்த்து என்று நியாயப்படுத்தப் பட்டிருக்கும். !. அதேபோல், இந்திய மக்களின் உள்ளார்ந்த ஜன்நாயக விவேகத்தை வெளிப்படுத்திய இந்த தேர்தல்கள் மாதிரி வெறெந்த நிகழ்வும் இல்லையெனவே கூறலாம். இந்திய வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சியை மிக்க் கடுமையாக தண்டித்தனர். பஞ்சாப், ஹர்யாணா, ஹிமாசல் ப்ரதேஷ், உத்தர பிரதேஷ் , தில்லி, பீஹார் போன்ற பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு பாராளுமற்ற இட்த்தைக் கூடப் பெறவில்லை !

மொர்ர்ஜி தேசாய் அரசு வெகு நாள் பதவியில் இருக்க முடியவில்லை. உட்கட்சிப் பூசல்கள் அந்த அரசை 1979-ல் முடிவுக்குக் கொண்டு வந்தன. மறுபடியும் அடுத்த பாராளுமன்றத் தேர்தல்கள் 1980-ல் நடந்தன. ஜனதா கட்சியில் இருந்த எங்களில் பலருக்கு நாங்கள் தேர்தலில் கடுமையாகத் தோற்போம் என்று புரிந்த்திருந்த்து. ஆனால், எங்களின் கணிப்பையும் மீறி ஜனதா கட்சி படு தோல்வி அடைந்தது. 1977-ல் 298 இடங்களோடு பெரும்பான்மை பெற்றிருந்த ஜனதா கட்சி 1980-ல் வெறும் 31 இடங்களையே பெற்றது!.இதில், 1977-ல் 93 என்ற நிலையில் இருந்த ஜனசங்கின் பங்கு வெறும் 16. மாத்திரமே !!

1980 தேர்தல்களுக்குப் பிறகு உடனடியாக , ஜனதா கட்சியி பாராளுமன்ற செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தீர்ன்மானிக்கப் பட்ட்து. அதோடு ஜனதா கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் ; அப்படிச் செய்தால்தான் , திட்டமிட்ட கால அட்டவணைப்படி கட்சித் தேர்தல்கள் நட்த்த முடியும் என்றும் தீர்மானிக்கப் பட்ட்து.

இந்த முடிவு, கட்சியில் சில பிரிவுகள் இரட்டை – உறுப்பினர் எதிர்ப்பு என்று பின்னாளில் அழைக்கப்பட்ட பரப்பு ஏற்படுத்தக் காரணமாயிற்று என்றே நான் நினைக்கிறேன். ஜனதா கட்சியிலும் இருக்கிறார்கள், ஆர் எஸ் எஸ்ஸின் உறுப்பினராகவும் இருக்கிறர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு பழைய ஜன சங்க உறுப்பினர்களைக் குறி வைத்து இந்த அவதூறு பிரசாரம் நட்த்தப்பட்ட்து .ராஷ்ட்ரிய ஸ்வயம் ஸேவக் சங்கம் ஓர் அரசியல் அமைப்பு அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். காங்கிரஸ்கர்ர் ஒருவரை அவர் ஆரிய சமாஜ் உறுப்பினராகவும் இருக்கிறார்; ஆகவே அவர் இரட்டை உறுப்பினர் என்று அவர் மீது குற்றம் சாட்டுவது போல இருந்த்து இது. ! விரைவிலேயே , முன்னாளைய ஜனசங்கத்தினர் அவரது ஆர் எஸ் எஸ்ஸி தொடர்பை வைத்துக்  கொள்வார்களேயானால், கட்சி முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தும் என்ற ரகசிய செவிவழிப் பிரசாரம் தொடங்கப்பட்ட்து.

இரட்டை உறுப்பினர் விஷயத்தில் நடந்தச் சூடு பறக்கும் விவாத்த்தில், சிறந்த காந்திய வாதியும் , சுதந்திரப் போராட்ட வீர்ருமான அச்யுத் பட்வர்த்தன் மூலம் மிகவும் தீர்க்கமான அறிவு சார்ந்த ஆலோசனை ஒன்று கிடைத்த்து.

ஜனதா, ஆர் எஸ் எஸ் மற்றும் நாடு என்ற தலைப்பில் பட்வர்த்தன் ' தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் பட்வர்த்தன் இவ்வாறு எழுதினார் :

அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து எழுந்த மக்கள் போராட்ட்த்திற்கு சேர்த்த வலிமை  மற்றும் பங்களிப்பின் காரணமாக , பரதிய ஜன சங்கம் , ஜனதா கட்சியில் அதன் ஓர் முக்கிய அங்கமாக இணைந்த்து. . அவசர நிலை நீக்கப் பட்ட்திலிருந்து இன்று வரை , ஜன சங்கம் மற்றும் அல்லது ஆர் எஸ் எஸ் இயக்கங்கள் கூட்டாகவோ அல்லது தனியாகவோ அப்படி என்ன குற்றம் செய்து விட்டன ? ஏன் மது லிமாயே, ராஜ் நாராயண் மற்றும் அவரது ஆத்ரவாளர்களும் சேர்ந்து ஒரு வெறித்தனமான அவதூறு பிரசாரம் செய்கிறார்கள், ஏன் அவர்களைத் இழித்துக் கூறுகிறார்கள் ?

ஸ்ரீ வாஜபேயீ, ஸ்ரீ நானாஜி தேஷ்முக் மற்றும் நான் இந்த இரட்டை உறுப்பினர் விஷயத்தை மிகவும் கடுமையாக்ச் சாடினோம். "கட்சிக் கூட்டங்களிலெல்லாம் நாங்கள் ஏதோ தீண்ட்த்தகாதவர்கள் போல் நட்த்தப் படுகிறோம் " என்று நான் வலிமையாகப் பேசினேன்.

ஜனதா கட்சியில் ஐந்து அங்கங்கள் இருந்தன.: காங்கிரஸ் (ஸ்), லோக் தள், சோஷலிஸ்ட் கட்சி, பாபு ஜகஜீவன் ராம் அவர்களின் ஜன்நாயக மையம் என்ற அமைப்பு ( CFD), மற்றும் ஜன சங்கம். இவற்றில் முதல் நான்கும் இரு பிறப்பு பெற்றவை ; ஜன சங்கம் என்பது குடும்ப்த்தில் தத்து எடுத்துச் சேர்க்கப்பட்ட்து எனலாம் .

தத்தெடுத்த 1977 –ல் குடும்பத்தில் மிகவும் கோலாகலம் நிறைந்திருந்த்து. ஆனால், காலம் செல்லச் செல்ல , குடும்பத்தில் தத்துப் பிள்ளையின் இருப்பு எல்லோருக்கும் பிரச்சினையாகி விட்ட்து. நான் மட்டும் இப்படி நினைக்கவில்லை. நாடு தழுவிய முன்னாளைய ஜன சங்கத்தினர் மற்றும் ஜனசங்க ஆதரவாளர்கள் அனைவரின் உணர்வுகளையுமே நான் பிரதிபலிப்பதாக நினைத்தேன் .

1980-ம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் , அடிப்படை உறுப்பினர்களின் எண்ணங்களை அறிய நானும் திரு சுந்தர் சிங் பண்டாரி அவர்களும் நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்தோம். சென்றவிடமெல்லாம் , முன்னாளைய ஜனசங்கத்தினர் (ஜனதா) கட்சியில் இரண்டாந்தர மக்களைப் போன்று தாங்கள் நட்த்தப் படுவதாக்க் குமுறுவதைக் காண முடிந்த்து.

இந்த இரட்டை உறுப்பினர் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக , 1980 ஏப்ரல் மாதம் 4-ம் தேதி, ஜனதா கட்சியின் தலைமை தேசிய செயற்குழுக் கூட்ட்த்தைக் கூட்டியது. இக்கூட்ட்த்தின் முடிவு என்னவாயிருக்கும் என்று ஓரளவு அறிந்திருந்த்தனால், வாஜபேயீ நானாஜி தேஷ்முக் இவர்களுடன் அனைவரும் சேர்ந்து முன்னாளைய ஜனசங்கத்தினர்களை அழைத்து ஏப்ரல் 5 6 தேதிகளில் ஒரு கருத்தரங்கம் நட்த்தினோம்.

எதிர்பர்த்தபடியே, ஏப்ரல் 4-ம் தெதியன்று நடந்த ஜனதா கட்சி செயற்குழுக் கூட்ட்த்தில், முன்னாளைய ஜனசங்கத்தினர் அனைவரையும் வெளியேற்றம் செய்வதென்று முடிவு செய்யப் பட்ட்து.

என்னுடைய சுய சரிதையில் நான் இவ்வாறு பதிவு செய்திருக்கிறேன் :

ஜன சங்கத்தினர் யாவருக்கும் ஜனதா கட்சியில் இருந்து வெளியேற்றம் என்பது ஒரு மிகப் பெரிய விடுதலையாக உணரப்பட்ட்து. 1980, ஏப்ரல் 5 ,6 தேதிகளில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒரு பெரிய புத்துணர்ச்சி ஊட்டும், உறுதியூட்டும் நிகழ்வாக அமைந்த்து.
"
தில்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்த்ல் 3500-க்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 6-ம் நாள் பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதென்று தீர்மானிக்கப் பட்ட்து. ஸ்ரீ அடல் பிஹாரி வாஜபேயீ தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஸ்ரீ சிக்கந்தர் பக்த், ஸ்ரீ சூரஜ் பன்ஹ் மற்றும் நான் பொதுச் செயலாளர்களகவும் பொறுப்பேற்றோம்.

நான் இந்த வலைப்பூவை ஈஸ்டர் ஞாயிறு பற்றிய குறிப்புடன் துவங்கியிருக்கிறேன். ஈஸ்டர் ஞாயிறு என்னும் கிறித்தவ பண்டிகை , ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட்தக்க் கருதப்படும் 'நல்ல வெள்ளி' நாளிலிருந்து இரண்டாம் நாளாகும் . இந்நாளில் ஏசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்த்தாக ஐதிகம்.

நமது கட்சியும் இவ்வாறே , 1980ம் ஆண்டு ஒரு நல்ல வெள்ளிக் கிழ்மையில் ஜனதா கட்சியின் தீர்மானத்தால் கொல்லப் பட்டோம்.; ஈஸ்டர் ஞாயிறன்று உயிர்த்தெழுந்தோம்.
""".
..
அடிக்குறிப்பு :

ஒருவன் தேவலோகம் போய் புனிதப் பேதுருவை , சொர்கத்தின் முத்துப் போன்ற வாசற் கதவுகளினருகில் சந்திக்கிறான். பேதுரு அவனிடம் , " இன்று ஒரு வித்தியசமன நாள். சொர்கத்திலோ அல்லது நரகத்திலோ உன் விருப்பம் போல் இருக்கலாம் . உன் விருப்பத்தைக் கூறு ' என்றார். மனிதனும் சரியென்றான். அவனை நரகத்துதிற்கு அனுப்பினார்கள்.

நரகத்தில் மனிதன் எங்கு நோக்கினும் பசுமையே காண்கிறான். ஒரு பெரிய பீர் தொட்டி, ஒரு கோல்ஃப் மைதனம் மற்றூம் அவனது பழைய நண்பர்கள் இவர்களைப் பார்க்கிறான். , கோல்ஃப் விளையாடுகிறான்; நன்றாக்க் குடிக்கிறான் ;நண்பர்களுடன் உல்லாசமாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறான். ஆஹா ! என்ன சுகம் !! என்கிறான்.

பின்னர் சொர்கத்திற்குப் போகிறான் . அங்கு எல்லாம் அமைதியாக இருக்கிறது. மேகத்துக்கு மேகம் தாவலாம் ; யாழ் இசைக்கலாம்.

நாளின் இறுதியில், பேதுரு அவனிடம் " என்ன முடிவு எடுத்திருக்கிறய் ? " என்று கேட்கிறார். தயக்கமே இல்லாமல், " நான் எந்த நாளும் நரகத்தையே தேர்ந்தெடுப்பேன் " என்கிறான் மனிதன்.

அவன் உடனடியாக நரகத்திற்கு அனுப்ப்ப் படுகிறான். ஆனல் அங்கே அழுக்கும் எரிமலைக் குழம்பும்தான் இருக்கின்றன. பீர் பாட்டிலும் இல்லை ; நண்பர்களையும் காணோம்.

" நேற்று இந்த இடம் மிகவும் நன்றாக இருந்த்தே !என்ன ஆச்சு இங்கே? " என்றுபிசாசிடம் மனிதன் அலறுகிறான்.

" நேற்று நாங்கள் பிரசாரம் செய்தோம். இன்று நீங்கள் வாக்களித்திருக்கிறீர்கள் " என்றது பிசாசு.

நன்றி ; எல்.கே. அத்வானி

நன்றி; தமிழில் வி.ராஜகோபாலன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...