1952 ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பை வடக்கு நாடாளுமன்ற தொகுதியிலும், 1954 ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ரா மாநிலம் பண்டாரா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வேட்பாளராக போட்டியிட்ட போது கம்யூனிஸ்ட்களோடு சேர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்து அவரை தோற்கடித்த காங்கிரஸூம்…
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய அரசியலமைப்பு சட்ட நகலை 1957 ஆம் ஆண்டு எரித்த ஈவெராவை தலைவராக ஏற்றுக்கொண்ட திமுகவும்…
இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படத்தை ஏந்தி நாடாளுமன்ற வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அப்பட்டமான நாடகம்..!!
திரு.ஜவகர்லால்நேரு, திருமதி.இந்திரா காந்தி, திரு.ராஜீவ்காந்தி திரு.நரசிம்மராவ், திரு.மன்மோகன்சிங் உள்ளிட்ட பிரதமர்கள் 54 வருட காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் 84 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் கலைத்து அரசியல் சாசனத்தையும், அதை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் அவர்களையும் அவமதித்ததையும் மக்கள் அனைவரும் மறந்திருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உயிரோடு இருந்த போது அண்ணலையும், அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தையும் அவமதித்தது காங்கிரஸ். டாக்டர்.ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் காலம் முதல் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் இன்றைய ஆட்சி காலம் வரை அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், அவர் உருவாக்கிய அரசியல் சாசனத்தையும் பெருமைபடுத்திய ஒரே தேசிய அரசியல் இயக்கம் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான் என்பதே நிதர்சனம்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களை தேர்தலில் சதி செய்து தோற்கடித்த காங்கிரஸூம், அவர் உருவாக்கிய அரசியல் சாசனத்தின் நகலை எரித்து அவமதித்த ஈவெராவின் வழிவந்த திமுகவும் இன்று அண்ணலின் திருவுருவ படத்தை ஏந்தி நாடாளுமன்ற வாயிலில் நிற்பது “கர்மா”.
நன்றி பாஜக மூத்த தலைவர் H.ராஜா
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |