தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை L -முருகன் தொடங்கிவைத்தார்

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிதாக வாரம் இரு முறை ரயில் சேவை இயக்கவும், கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவையை போத்தனூர் வரை நீட்டிக்கவும், கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சாமல்பட்டியில் புதிய ரயில் நிறுத்தம் ஏற்படுத்தவும், மைசூரு- மயிலாடுதுறை எக்ஸ்பிரசை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கவும், தற்போது வாரம் 5 நாள் இயக்கப்படும் மயிலாடுதுறை- திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்றவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 8.20 மணிக்கும், பகல் 13.05-க்கும் புறப்பட்டு கோவை வரை இயக்கப்பட்ட மெமு ரயில்கள் போத்தனூர் சந்திப்பு வரை நீட்டிக்கப்படுகிறது. கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஞாயிறு தவிர பிற நாட்களில் இயக்கப்பட்டு வந்த ரயிலும் இனி போத்தனூரிலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நீட்டிக்கப்பட்ட ரயில் போக்குவரத்தின் முதலாவது சிறப்பு ரயில் சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் 2024 ஜூலை 19 காலை 10.55 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ ராசா, சட்டமன்ற உறுப்பினர்
திரு ஏ கே செல்வராஜ், மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் எமகரிபா பர்வின் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கின்றனர்.

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரயில், 2024 ஜூலை 20 முதல் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து இரவு 22.50 மணிக்கு புறப்பட்டு வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமை காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 19.35 மணிக்கு புறப்பட்டு சனி மற்றும் திங்கட் கிழமை காலை 4.20 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.

மேலும் கோவை- திருப்பதி ரயிலுக்கு சாமல்பட்டியில் வழங்கப்பட்டுள்ள புதிய நிறுத்தம் வரும் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்ட சேவையையும் அமைச்சர் எல் முருகன், மேட்டுப்பாளையத்திலிருந்து 19-ம் தேதி காலை 10.55 மணியளவில் காணொலி வாயிலாக தொடங்கிவைக்க உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...