ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்களே சர்வதேசளவில் இந்துமதம் பரவ காரணம்

ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்களே சர்வதேசளவில் இந்துமதம் பரவ காரணம்  சர்வதேசளவில் இந்துமதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்களே காரணம். கால்நடையாகவே நடந்து இந்து மதத்தின் பெருமையை பரப்பினர் என பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்தார்.

பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:சிறந்த மதமான இந்துமதத்தை ஆதிசங்கரர் கால்நடையாக நடந்து தெற்குமுதல் வடக்குவரை, கிழக்கு முதல் மேற்குவரை நாடுமுழுவதும் பரப்பினார். அதேபோல் 1893 ஆண்டு அமெரிக்க நாட்டின் சிகாகோநகரில் சர்வதேச இந்துமாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியதன் மூலம் இந்துமதம் சர்வதேச அளவில் பரவியது.

விவேகானந்தனரின் பேச்சைகேட்ட அமெரிக்கர்களும் இந்து மதம் சிறந்த மதம் என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். சிகாகோ மாநாட்டில் கலந்துகொள்ள மும்பையிலிருந்து கப்பலில் 1893 ஆண்டு விவேகானந்தர் புறப்பட்டுசென்றார். இந்த ஆண்டும் அதே தினத்தில் விவேகாந்தனரின் 150வது பிறந்த நாள் விழா மும்பையில் கொண்டாடப் படுகிறது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர் .

இந்திராகாந்தி ஆட்சியின்போது அவசரகால நிலையில் பெங்களூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கன்னடம் படிக்க கற்றுக்கொண்டேன். இன்னும் அதிக நாள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தால் கன்னடத்தை முழுமையாக கற்றுக்கொண்டிருப்பேன்.

தேசிய பாடலில் இடம்பெற்றுள்ள சிந்துநதியை காண யாரும் பாகிஸ்தான்செல்ல தேவையில்லை. திபத் எல்லையோரும் அமைந்துள்ள லடாக்பகுதியில் உள்ள மானசசரோவரா பகுதியில் சிறிய அளவில் ஓடும் சிந்துநதியை கண்டுமகிழலாம்.தற்போது அதனால் பாகிஸ்தான் பயனடைதாலும், ஒன்றாய் இருந்த பாரத நாட்டின் உன்னதமானநதி அது. சிந்து நதியில்லை என்றால் இந்து மதம் இல்லை என்று முன்னாள்பிரதமர் ஜவகர்லால் நேருவால் புகழப்பட்ட நதி சிந்து என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...