பாஜக மூத்த தலைவர் அத்வானியை அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என அவர் போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் நரேந்திர மோடி பிரசாரம்செய்தார். பாஜக மூத்த தலைவர் அத்வானி குஜராத்தின் காந்தி நகர் தொகுதியிலிருந்து 6 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கலோல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அத்வானியை ஆதரித்து அவர் பேசியதாவது:அத்வானி எனக்கு அரசியல்குரு. அவருக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன். சிக்கலான பல சந்தர்ப்பங்களில் ஒருதந்தையை போல் எனது கையைபிடித்து சரியான வழியை காட்டியவர் அவர். நல்ல ஆலோசனைகள் வழங்கியவர். இந்ததொகுதி மீது எனக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதுபோன்ற உரிமை என் மீது அத்வானிக்கு உள்ளது. இந்தமண்ணின் மைந்தன் நான். என்னை வளர்த்தவர்கள் நீங்கள்.
இன்று உங்கள் உதவியை நாடிவந்துள்ளேன். அத்வானியின் நீண்ட நெடிய பொதுவாழ்க்கையில் களங்கம் இல்லை. இந்ததேசத்துக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர். அவரை நீங்கள் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.