உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் உடல் வீக்கம், இரத்த அழுத்தம் அதிகரித்தல், மூச்சுத் திணறல், ஆஷ்துமா போன்ற நோய்கள் தோன்றலாம்.
முள்ளங்கியை(Radish) சாறுயெடுத்து தினமும் காலை, மாலை 30 மிலி. சாப்பிட்டு வர நீங்கும்.
தினமும் சுத்தமான வெள்ளைப் பூண்டினை 10, திரிகள் – ஒரு குவளைச் சுத்தமான தண்ணீர்விட்டு, மண் சட்டியில் போட்டு – நன்கு காய்ச்சி, கஷாயம் செய்து குடித்து வர வேண்டும். தவறாமல் காலை – மாலை ஒரு மண்டலம் குடித்து வர வேண்டும். உணவில் கொழுப்புச் சத்துள்ள புலால் உணவையும், எண்ணெய், நெய், கிழங்கு வகைகளையும், உப்பையும் நீக்க வேண்டும்.
சிறு நீரக கோளாறு இருப்பவர்கள், வாழைத்தண்டு சாறு எடுத்து அருந்த, பலன் கிடைக்கும்.
சிறுநெறிஞ்சி இலையைக் கொண்டுவந்து சுத்தப்படுத்தி மண் சட்டியிலிட்டு, சுத்தமான – தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்து, ஆறிய பின் – ஒரு நாளைக்கு இரு வேளைகள், உணவுக்கு முன் குடித்து வர வேண்டும்.
வேக வைக்காத பச்சை வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து அரை அவுன்ஸ் வெங்காயச் சாற்றோடு, ஒரு அவுன்ஸ் சுடுநீர் கலந்து உணவிற்கு முன் காலை மாலை இருவேளையும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சிறுநீரகக் கோளாறுகள் சரியாகும்.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.