இரண்டு நாள் பயணமாக தமிழகம்வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணதிட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கவிழா மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழகம் வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் பயணத் திட்டம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாளை (ஜூலை 28) பிற்பகல் 2.20 மணிக்கு அகமதாபாத் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு இந்திய விமானப் படைக்குச்சொந்தமான விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மாலை 5.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் மோடி மாலை 5.45 மணிக்கு ஐஎன்எஸ் கடற்படை விமானத்தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில்பயணிக்கும் பிரதமர், மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டரங்கத்திற்கு வருகைதருகிறார்.
நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 6 மணிக்கு 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக பயணித்து, இரவு 7.50 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குசெல்லும் பிரதமர் அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
அடுத்தநாள் (ஜூலை 29) காலை சாலைமார்க்கமாக பயணித்து அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர், காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பயணிக்கும் பிரதமர் காலை 11.50 மணிக்கு சென்னை விமானநிலையம் செல்கிறார். சென்னை விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி மீண்டும் அகமாதபாத் திரும்பிசெல்கிறார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |