மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சியைபிடித்தது. பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதேஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்தநாளில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் 9-வது ஆண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரவுபதிமுர்மு பேசியதாவது: தூய்மை இந்தியா (கிராமப் புறம்) திட்டம் பழக்கவழக்கத்தை மாற்றும் இயக்கமாக திகழ்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 11 கோடி கழிவறைகள் கட்டப் பட்டுள்ளன. இதனால் 60 கோடிக்கும் மேற்பட்டோர் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளனர். ஐ.நா.சபையின் நீடித்தவளர்ச்சி இலக்கின் 6-வது பிரிவு அனைவருக்கும் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரவசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த இலக்கை 2030-க்குள் எட்ட காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ள போதிலும் இந்தியா முன்கூட்டியே எட்டிவிட்டது.
தூய்மைஇந்தியா திட்டத்தின் 2-வது கட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்து 6 லட்சம் கிராமங்களிலும் 100% கழிவறைகளை கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.16 லட்சம் கிராமமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதில் இருந்து 100% விடுபட்டுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் 2024-க்குள் குழாய்மூலம் சுத்தமான குடிநீர் வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 2019-ல் ஜல்ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது 3.23 கோடி குடியிருப்புகளுக்கு மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 10.27 கோடியாக அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில், கழிவறைகள், கைகளை சோப்பு போட்டு கழுவுதல், குழாய்மூலம் குடிநீர் விநியோகம் ஆகியவை நோய் பரவுவதை தடுக்க பெரிதும் உதவியதை அனைவரும் உணர்ந்தனர். இவ் வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |