அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

 இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை உடையது. இதன் வேரைக் கஷாயமாக உண்டால், வறட்சியை அகற்றும், உள்ளழலாற்றும், கோழையை அகற்றும் மலத்தை இளக்கும்; உடலுக்கு நன்மை பயக்கும்.

 

தேக அனல் தணிய, அதிமதுரம் 15 கிராம் எடுத்து வெந்நீரில் அரைத்துக் கலக்கி வடி கட்டிக் காலை, மாலை கொடுக்கவும்.

மஞ்சள் காமாலைக்கு

அதிமதுரம், முட்சங்கன் வேர்ப்பட்டை இந்த இரண்டையும் சம பங்கு எடுத்து, எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து மூன்று நாட்கள் தேக்காங் கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக்கொண்டு பாலில் ஒரு நாளைக்கு இரண்டு தடவை கொடுத்தால் குணம் ஆகும்.

சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு

அதிமதுரம் கடுக்காய், மிளகும் இவை சமனெடை எடுத்து இளம் பதமாய் வறுத்து சூரணம் செய்து 3 கிராம் முதல் 5 கிராம் வரை தேனில் கலந்து கொடுக்கக் குணமாகும்.

கர்ப்பவதிகளுக்கு காணும் உதிரம் நிற்க

அதிமதுரம், சீரகம் வகைக்கு 10 கிராம் சேர்த்து, இடித்து 250 மில்லி, நீர்விட்டு 125 மி.லி. ஆகக் காய்ச்சி காலை, மாலை இரு வேளையும் 3 அல்லது 4 நாட்கள் கொடுக்க தீரும்.

பேதியாக வேண்டும் என்றால்

அதிமதுரம் 100 கிராம் காய்ந்த திராட்சை, உப்பு, 200 கிராம் ஒன்றாகச் சேர்த்து ½ லிட்டர் தண்ணீரில் 125மி.லி. ஆகச் சுண்ட வைத்துக் கொடுக்க இரண்டு முறை பேதியாகும். நிறுத்த மோர் குடிக்கவும்.

இதன் இலையை அரைத்துப் பூசி வர, உடலிலும், அக்குளிலும் உண்டாகும் துர்வாசனை, அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.

வாயுபிடிப்பு, சுளுக்கு உண்டானால், சிற்றாமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) தடவி குன்றி இலையை அதன்மேல் ஒட்டவைக்க குணமாகும். அப்போது ஒருவித விறுவிறுப்பு உண்டாகி வலி குணமாகும்.

அதிமதுர சூரணம்

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர் பட்டை 20 கிராம், இவைகளைச் சூரணம் செய்து சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை 3 கிராம் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர பொதுவாக நோய் வராது, தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத தலைவலி தீரும், சுரம் தீரும், கண் ஒளி பெரும். ஒரு சிறு அதி மதுரத் துண்டை ஒன்று வாயில் போட்டுச் சுவைத்து இரசத்தை விழுங்க, உடல் வறட்சி, இருமல் தணியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...