பங்குசந்தை வீழ்ச்சி குறித்து பிரதமர் ஆய்வு

 பங்குசந்தை வீழ்ச்சி, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு நடத்தினார் என்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.

பங்குசந்தையில் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக பங்குகளின் சந்தை மதிப்பு ஒரேநாளில் ரூ.7 லட்சம் கோடி சரிவடைந்தது. அதே போல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 66 ரூபாய் 64 காசுகளாக சரிவடைந்தது.

பிரதமர் நரேந்திரமோடி பங்குசந்தை நிலவரம், இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நமது பொருளா தாரத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். நமது பொருளாதாரம் நிலையாக உள்ளது. ஆனாலும் இன்னும் நிறைய செய்யவேண்டிய தேவை உள்ளது.

ஆனாலும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் உள்ள கொள்கைகளில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை. அந்தபணிகள் தொடர்ந்து நடைபெறும். உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார சிக்கலை இந்தியாவுக்கான ஒருவாய்ப்பாக மாற்றவேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

உலகளவில் வர்த்தகத்தில் இப்படி நிலையற்ற தன்மை ஏற்படுவது இயற்கையானதுதான். அனைத்து உலக சந்தைகளிலும் கடும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்போதுள்ள சூழ்நிலையை ஒருவாய்ப்பாக பயன் படுத்திக் கொள்ள முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும். இதுதொடர்பாக தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...