அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா

” அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

அசாமில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: அசாமில் 10 ஆயிரம் இளைஞர்கள் ஆயுதங்களை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் அமைதி திரும்பி உள்ளது. அசாமிற்கு 3 லட்சம் கோடி உள்கட்டமைப்பு திட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. கூடுதலாக, சமீபத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு முதலீடு கிடைத்து உள்ளது.

அசாமில் அமைதி நிலவ காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி அமைதியை நிலைநாட்டியதுடன், உள்கட்டமைப்பை வளர்த்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுவதை உறுதி செய்துள்ளார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் அசாமிற்கு ரூ.1.27 லட்சம் கோடி நிதி ஒதுக்கியது. பிரதமர் மோடி ஆட்சியில் இந்த தொகையானது நான்கு மடங்கு அதிகரித்து ரூ.4.95 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அசாமை புறக்கணித்து, அமைதி, வளர்ச்சியை ஏற்பட காங்கிரஸ் அனுமதிக்காதது ஏன்?பிரதமர் மோடி ஆட்சியில் அனைத்தும் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி� ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்� ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம� ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்� ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி� ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...