இந்தியா – பங்களாதேஷ் இடையில் சரக்குகளை விரைவில் கொண்டு செல்ல ஒப்பந்தம்

 இந்தியா – பங்களாதேஷ் இடையில் ஏற்கனவே செய்யப்பட்ட கடற்கரை கப்பல் ஒப்பந்ததினை செயல் படுத்தும் விதத்திலான செயல் முறை பொதுத் திட்டத்தில் இரு நாடுகளும் ஞாயிற்றுக் கிழமை கையெழுத்திட்டன.

மத்திய கப்பல் மற்றும் போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி முன்னிலையில் புது டெல்லியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய கப்பல்துறை அமைச்சகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் மற்றும் பங்களா தேஷை சேர்ந்த மூத்தபொறியாளர் மற்றும் கப்பல்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதின் கட்கரி கருத்து தெரிவிக்கும்போது, ‘இந்தியா – பங்களாதேஷ் கடற்கரை கப்பல் ஒப்பந்தம் நடை முறைப்படுத்த தொடங்கினால் இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதியை அனைத்து வகையிலும் எளிமைபடுத்த முடியும்.

பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் பங்களாதேஷ் சென்றபோது இரு நாடுகளுக்கு இடையே 22 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் பங்களாதேஷில் உள்ள மோங்லா மற்றும் சிட்டகாங் துறை முகத்துக்கு இந்திய சரக்கு கப்பல்களை அனுமதிக்கவும் ஒப்பந்தமும் ஒன்று.

இது வரை இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாகவே சரக்குகப்பல்கள் பங்களாதேஷுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தை அடுத்து இனி நேரிடை யாகவே இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்கு சரக்குகளை கொண்டு செல்ல முடியும்.

இதுவரை பங்களாதேஷுக்கு சரக்குகள் செல்ல 30 முதல் 40 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், இனி மேல் ஒரே வாரத்தில் சரக்குகளை கொண்டு செல்ல முடியும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...