இருதரப்பு விமானசேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் எந்தவொரு வெளிநாட்டு விமான நிறுவனமும் இந்தியாவிற்கோ அல்லது இந்தியாவிலிருந்தோ விமானசேவையை அளிக்க முடியும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக 116 வெளிநாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலிருந்தும் அந்த வெளிநாடுகளுக்கு விமானச் சேவையை இயக்கமுடியும்.
சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் விமானசேவைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பூடான், கனடா, சீனா, சிரியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகளுடன் இருதரப்புவிமான சேவை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இத்தகவலை மாநிலங்களவையில் விமான போக்குவரத்து இணைஅமைச்சர் ஓய்வு பெற்ற ஜெனரல் வி கே சிங், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |