இஷ்ரத்ஜகான் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படை தீவிரவாதி

குஜராத் என்க வுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவி இஷ்ரத்ஜகான், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படை தீவிரவாதிதான் என்று மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்ற வாளிகளில் ஒருவரான டேவிஹெட்லி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2006ஆம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி மும்பையைச் சேர்ந்த இஷ்ரத் ஜகான் குஜராத்போலீசாரால் அகமதாபாத் புறநகரில் சுட்டுக் கொல்லப் பட்டார். குஜராத் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்ததால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆனால் இது போலி என் கவுண்ட்டர் என்று போலி மதச் சார்பின்மையினரும்  மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த என் கவுண்ட்டர் வழக்கில்தான் தற்போதைய பா.ஜ.க. தலைவர  அமித்ஷா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டிருந்தார்.

அதேபோல் காவல் துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் பலரும் இந்தவழக்கில் சிக்கி உள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா சிறையில் உள்ள மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்ற வாளிகளில் ஒருவரான ஹெட்லியிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணைநடத்தி இருந்தனர். அந்த விசாரணையின் போது இஷ்ரத் ஜகான், லஷ்கர் இதொயா இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி என ஹெட்லி உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஹெட்லி அண்மையில் மும்பை நீதி மன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி அப்ரூவரானார். அவருக்கு நீதிமன்றம் மன்னிப்புவழங்கி சாட்சியமாக்கி உள்ளது. இனி ஹெட்லியிடம் நடத்தபடும் விசாரணையில் இஷ்ரத்ஜகான் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...