சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ஐந்தும்,அத்திப்பட்டையில் ஒரு கைபிடியளவும் எடுத்து அம்மியில் நன்றாக நைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ப்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி மிதமான சூட்டில் இருக்கும்பொழுது மூலத்தின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கழுவி வர வேண்டும். இப்படி காலை, மாலை செய்து வந்தால் மூலம் சுருங்கி உள்ளேயே நின்று விடும்.
மலச் சிக்கலை நீக்க உணவிற்கு பிறகு சிறிதளவு அத்தி விதைகளை சாப்பிடலாம்,
நாள்பட்ட மலச் சிக்கலை குனபடுத்த 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்
ஒரு கைப்பிடியளவு அத்திப்பட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து அதை வடிகட்டி புண்ணை கழுவி துடைக்க வேண்டும். பிறகு எந்த மருந்தைப் போட்டாலும் ஆறாத புண்ணும் ஆறும்.
நீண்டநாள் நோய் வாய்ப்பட்டிருந்தவர் விரைந்து குணம் பெற உதவும். முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவரக் கூடிய உணவாக கருதப்பட்டு. உடல் மற்றும் மனம் சார்ந்த சிரமத்தை நீக்கும். உடம்பின் ஆற்றலை, திடத்தைப் புதுப்பித்துக் கொடுக்கும்.
மாதவிடாய்க் காலத்தில் அதிக அளவு இரத்தப்போக்கு வயிற்றுக்கடுப்பு, ஈரல் அழற்சி குணம் காண 150 கிராம் உலர்ந்த திராட்சை பழத்துடன் தேன் கலந்து உண்ணலாம். நீரிழிவிலும் நல்ல பலனளிக்கும். உலர்ந்த பழக்கஷாயம் கொண்டு வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் சரியாகும்.
பறித்த பலமாகவோ, உலர்த்தியதாகவோ எப்படி இருந்தாலும் அது மலமிலக்கியாக செயல்படும். குடலில் குவிவது போன்ற அல்லது அலை மாதிரியான அசைவுகளை தூண்டும்.
மலமிளக்கிப் பண்பு காரணமாக இது மூலத்தை குணப்படுத்தவும் உதவும். இரண்டு அல்லது மூன்று பழங்களை ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் ஊறவைக்கவும். காலையில் உட்கொள்ளலாம். அதே மாதிரி மாலையிலும் பழங்களை உண்ணலாம். மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தை நீக்கும். அவ்விதமாக ஆசனவாய் பிதுக்கத்தை தடுக்கும். அத்திப்பழத்தை மேற்சொன்னவாறு 3-4 வாரங்கள் தொடர்ந்து உண்டுவர மூலநோய் குணமாகும்.
கபத்தை உலரச் செய்வதன்மூலம் ஆஷ்துமா நோயாளிக்கு ஓர் சவுகர்ய உணர்வைத்தரும்.
வாதுமை, பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களுடன் அத்திப்பழத்தையும் சேர்த்து உண்ண வேண்டும். வெண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம். பால் சார்ந்த பலவீனத்தைப் போக்குவதில் இது நிகரற்றது.
கவனத்திற்கு அத்திப்பழத்தை உபயோகிப்பதற்கு முன் நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். உலர்ந்த பழத்தின் தோல் கடினமாக இருக்கும் என்பதால் ஊறவைத்து உண்ண வேண்டும் அது எளிதில் சீரணமாகும்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.