மராட்டியத்தில் இஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுகளை நிறுத்திகொள்ள வேண்டும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்மந்திரியாக பதவி வகித்த போது அவரை கொலைசெய்ய வந்த 4 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் மராட்டியத்தை சேர்ந்த இஸ்ரத் ஜகானும் ஒருவர். இவர் லஷ்கர்– இ– தொய்பா தீவிரவாதி என்று மும்பை தாக்குதல் தீவிரவாதி டேவிட் ட்லி வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில், மராட்டியத்தில் இஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுகளை நிறுத்தி கொள்ள வேண்டும் என முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘இஸ்ரத் ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுகள் பற்றிய விவரம் பெறப்படுகிறது. அந்தபெயரில் ஓடும் ஆம்புலன்சுகளை அவர்களாகவே நிறுத்திகொள்ள வேண்டும். இஸ்ரத் ஜகான், லஷ்கர் –இ– தொய்பா அமைப்பின் தீவிரவாதி என நிரூபிக்கபட்டு இருப்பதால் அவரதுபெயரில் ஆம்புலன்சுகள் இயக்கப்படுவது தவறு’’ என்றார்.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.