முதலில் பிகாரில் சட்ட-ஒழுங்கை நிலைநாட்டுங்கள்

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஒரு சிறந்த நடிகர் என்று லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கிண்டலாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து பிகார் தலைநகர், பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

பிகார் மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் நிகழாமல் நிதீஷ்குமார் தடுப்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெற செய்தனர். ஆனால், மாநிலத்தில் கொலை, கொள்ளை அதிகரித்ததுடன் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லா சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், அடுத்த மக்களவை தேர்தலில் நிதீஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த போவதாக ஜனதா கட்சிகள் தெரிவித்துள்ளன. முதலில் பிகாரில் சட்ட-ஒழுங்கை நிலைநாட்ட அவர் முயற்சிக்கட்டும். அதன்பிறகு தேசிய அளவிலான அவரது லட்சியத்தை முன்னெடுக்கலாம்.

பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என நிதீஷ் கூறிவருகிறார். சுமார் 17 ஆண்டுகளாக பாஜக.,வுடனும், ஆர்எஸ்எஸ் அமைப்புடனும் கூட்டணி வைத்திருந்த போது இந்த ஞானோதயம் அவருக்கு வரவில்லையா?

நிதீஷின் இத்தகைய தேர்ந்தநடிப்பை அனைவரும் பாராட்ட வேண்டும். பிகாரில் மதுவிலக்கை தற்போது அமல்படுத்தியுள்ள அவர், இதற்குமுன்னர் பல ஆண்டு காலமாக தெருவுக்குத்தெரு மதுக்கடைகளைத் திறக்க வழிவகுத்தவர் என்பதை மறக்கக்கூடாது என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...