நிதிஷ்குமார் கனவால் பிஹார் சீர்குலைந்திருக்கிறது

“பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், பாஜக கூட்டணியில் இணைய இனிவாய்ப்பே இல்லை” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பிஹாரின் லவுரியா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர்பேசியதாவது: ”பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தர்ப்ப வாதியாக மாறிவிட்டார். இனி பாஜகவின் கதவுகள் அவருக்காக ஒரு போதும் திறக்கது. ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணி மிகவும் பாதகமான கூட்டணி. எண்ணெயும் தண்ணீரும் எப்படி ஒன்றுசேராதோ அதுபோலத் தான் இந்த இரு கட்சிகளின் கூட்டணி.

பிரதமராக வேண்டும் என நிதிஷ்குமார் கனவு காண்கிறார். அவரது இந்த கனவால், பிஹார் சீர்குலைந்திருக்கிறது. பிரதமர்பதவி 2024-லும் காலியாகாது. நரேந்திரமோடி மீண்டும் பிரதமராவார். பிஹாரில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் கெட்டு விட்டது. குற்றங்கள் அதன் உச்சத்திற்கு சென்று விட்டன. பிஹாரில் கொலை, கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தங்களுக்கான பாதுகாப்பான இடமாக பிஹாரை மாற்றமுயன்றன. நிதிஷ் குமார் இதனை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அந்த அமைப்பையே தடைசெய்துவிட்டார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் வைத்த கூட்டணி காரணமாக பிஹார் முழுவதும் பற்றிஎரிகிறது. அதனை அணைக்கும் துணிவு நிதிஷ் குமாருக்கு இல்லை.

பிஹாரின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இருப்பதால், தற்போது மாநிலத்தில் பாதிகாட்டாட்சி வந்துவிட்டது. தேஜஸ்வி யாதவ் முதல்வராக ஆகிவிட்டால் முழுகாட்டாட்சி வந்துவிடும். அவரை முதல்வராக்கப் போவதாக நிதிஷ் குமார் கூறி இருக்கிறார். ஆனால், அதற்கான தேதியை அவர் கூறவேண்டும்” என்று அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...