காங்கிரஸ்கட்சி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது

காஷ்மீரிலுள்ள பா.ஜ.க கூட்டணி அரசை அகற்ற காங்கிரஸ் திட்டமிடுவதாக மத்திய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாறிமாறி பேசிவருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியவர், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் காஷ்மீர் பற்றி ஒருகருத்தை தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ அது தன்னுடைய கருத்துஇல்லை என மறுப்பு தெரிவிக்கிறது . சல்மான் குர்ஷித் கூறிய கருத்திற்கும் இதேமுறையில் மறுப்பு வெளியிட்டுள்ள காங்கிரஸ், ப.சிதம்பரம் காஷ்மீர் பற்றி கூறியகருத்தையும் கட்சியின் நிலைப்பாடு இல்லை என காங்கிரஸ் தலைமை மறுப்பது முரண்பாடாக இல்லையா என வினவியுள்ளார்.

காங்கிரஸ், பிடிபி மற்றும் தேசியஜனநாக கட்சி சேர்ந்து புதிய ஆட்சியமைக்க வேண்டும் என முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், காஷ்மீரில் ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பதாக குறிப்பிட்டார். அதை அகற்றுவதுதான் காங்கிரஸ் கட்சியின் திட்டமா என்றும் வெங்கய்ய நாயுடு வினவியுள்ளார். மேலும் தம்மை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி காஷ்மீர் விவகாரத்தில் பல முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளதாக சாடினார். காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரஸ்கட்சி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதாக வெங்கய்ய நாயுடு     புகார்தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனையில் பிண்ணனியில் பாகிஸ்தான் இருப்பது கூடவா காங்கிரஸ் கட்சிக்குதெரியாது என கேள்வி எழுப்பிய அவர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறும் காங்கிரஸ் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...