ரயில்வே துறைக்கு இனி தனிபட்ஜெட் இல்லை

பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல்செய்யப்படும் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு, மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைதொடர்ந்து, ரயில்வே துறைக்கு இனி தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்படமாட்டாது.

கடந்த 1924-ம் ஆண்டு முதல் ரயில்வேக்கு என தனிபட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி கால மரபு இது . ஆண்டுதோறும், பொதுபட்ஜெட்டுக்கு முன்னதாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதும் வழக்கமாக தொடர்ந்துவருகிறது. கடந்த பாஜக. ஆட்சியிலேயே ரயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நிறைவேற்ற முடியவில்லை.

அதன் பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றதேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததும், மீண்டும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இதுதொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க 5 பேர் கொண்ட குழுவை மத்திய நிதியமைச்சகம் நியமித்தது.

 இந்தக்குழு சமீபத்தில் அளித்த அறிக்கையில், ரயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைக்கலாம் என்று பரிந்துரைசெய்தது. இதனை மத்திய நிதியமைச்சகம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில், ரயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல்செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைதொடர்ந்து, வருகின்ற நிதியாண்டு முதல் பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைத்து தாக்கல்செய்யப்பட உள்ளது.

அதேபோல், 2017-18-ம் நிதியாண்டு முதல் பொதுபட்ஜெட் பிப்ரவரி 28-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல்செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதனால், பட்ஜெட் தொடர்பான அனைத்து துறைகளின் பரிந்துரைகளும் வருகின்ற நவம்பர் 15-ம் தேதிக்குள் இறுதிசெய்யப்படும். பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுபட்ஜெட் இனி தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...