ரயில்வே நமது தேசிய சொத்து,

இந்திய ராணுவத்தில் புதியமுறையில் ஆள் சேர்க்கும்விதமாக, `அக்னிபத்’ எனும் திட்டத்தைக் கடந்த செவ்வாயன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிமுகப் படுத்தியிருந்தார். இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியிருந்தது.

இதுவொருபுறமிருக்க, அக்னிபத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம், பெரும் கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில், பீகார், தெலங்கானா மாநில ரயில் நிலையங்களில், ரயில்களுக்குத் தீவைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், தெலங்கானா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே சொத்துகளைச் சேதப்படுத்தவேண்டாம் என்பதாக கோரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “ரயில்வே நமது தேசியசொத்து, அதற்கு எந்த பாதிப்போ, சேதமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு. அதுமட்டுமல்லாமல் ரயில்வே, உங்களுடைய சேவைக ளுக்காக மட்டுமே. எனவே வன்முறையில் யாரும் ஈடுபடவேண்டாம்’’ என்றும், “ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தவேண்டாம்’’ என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.