மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, பித்த வாந்தி யாவும் நீங்கும். உடலின் வெப்பம் குறையும். நல்ல பலத்தை உருவாக்கும்.
ரத்தமாகவே போகும் சிறுநீர், ரத்தமூலம், சீத இரத்தம் இவை நீங்கும்.
மாதுளை உலர்ந்த பூ, கசகசா, வேம்பு இம்மூன்றையும் தனித்தனியாகத் தூள் செய்து, சமமாக எடுத்து, பிறகு ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினம் 3 வேளை, ஐந்து மிளகு அளவு இத்தூளை எடுத்து பாலுடன் கலந்து கொடுக்க நாளடைவில் மேற்கண்ட நோய்கள் நீங்கிக் குணமாகும்.
வாந்தி, மயக்கம், உஷ்ணம் ஆசனக் கடுப்பு, ரத்த மூலம் இவை நீங்க
தேவையான மாதுளம் பூக்களை எடுத்து அதன் பிழிந்த சாறு, அரை அவுன்ஸ் இதனுடன் கொஞ்சம் கற்கண்டு சேர்த்து தினமும் தொடர்ந்து 3 நாட்களுக்கு காலை – மாலை 2 வேளை சாப்பிட்டு வந்தால் படிப்படியாக நிவர்த்தியாகும்.
இருமல் குணமாக
உலர்ந்து உள்ள மாதுளை மொக்கை எடுத்து நன்றாக இடித்துச் சூரணமாக்கி, ஒரு உளுந்து பிரமாணம் எடுத்து சாப்பிட்டுச் சிறிதுத் தண்ணீர் அருந்த இருமல் நீங்கும்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.