ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளை துவக்கி வைத்தார்: பிரதமர் மோடி

ஒடிசாவின் ராயகடா ரயில்வே மண்டல கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், தெலுங்கானாவில் சர்லாபள்ளி ரயில் நிலையம், ஜம்மு ரயில்வே மண்டலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.

ரயில்வே உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில், ஒடிசாவின் ராயகடா ரயில்வே மண்டல கட்டடத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

மேலும், தெலுங்கானாவில் சர்லாபள்ளி ரயில் நிலையம், ஜம்மு ரயில்வே மண்டலத்தையும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நம் நாட்டின் ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வருகின்றன. 2025ம் ஆண்டு துவக்கத்தில், ‘மெட்ரோ’ ரயில் சேவை, 1,000 கி.மீ., துாரத்தை எட்டியுள்ளன.

இப்போது துவங்கப்பட்டுள்ள இந்த மூன்று புதிய சேவைகள், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ரயில்வேயின் புதிய மைல்கல்லாக திகழும்.

ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

மொத்தம், 50 வழித்தடங்களில், 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் நடந்த சோதனை ஓட்டத்தில், வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ., வேகத்தை எட்டியுள்ளது.

நம் நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து இந்திய நிலைகளை பாதுகாத்த ஆகாஷ் ஏவுகணை இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட ஆகாஷ் ...

இறையாண்மையை காப்போம் இந்திய ரா� ...

இறையாண்மையை காப்போம் இந்திய ராணுவம் உறுதி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது குறித்து, இந்திய ராணுவம் ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குத� ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந� ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம் நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை ...

முப்படைகளை களமிறக்கியது இந்தி� ...

முப்படைகளை களமிறக்கியது இந்தியா அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம் பாகிஸ்தான் நேற்று இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்க ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...