தனது தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர்

மூலாதாரத்திற்கு உரியவராக இருக்கும் விநாயகபெருமான் கடவுள்களில் முதலானவராக விளங்குகிறார். பொதுவாக முழுமுதற் கடவுளான விநாயகபெருமானை வணங்கி விட்டே எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கும் பழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

குறிப்பாக எந்த ஓரு சுப விஷயத்தை செய்ய

 

தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு விட்டு ,””அப்பனே! விநாயகா ! தொடங்கும் செயல் தடையேதும் இன்றி இனிதே நிறைவேற்றி அருள்வாய்!” என வணங்கி விட்டே செயல் படுவர். அதேபோன்று எழுத தொடங்கினாலும், “பிள்ளையார் சுழி போட்டு விட்டே எழுத தொடங்க வேண்டும் ‘ என்று குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் வழிகாட்டுவர்.

விநாயகருக்கும் சிறந்த எழுத்தாளராக பணியாற்றிய அனுபவம் உண்டு . தனது தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர்.விநாயகர் சதுர்த்தி நாளன்று விநாயகரை வணங்குவோருக்கு விநாயக பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்.

விநாயக சதுர்த்தி அன்று விநாயகரை போற்றி வழி படுவதற்கு ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளை தொகுத்து வழங்கி இருக்கிறோம்

இதை விநாயக சதுர்த்தி அன்று விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவேறும். தோஷங்கள் யாவும் நீங்கும். வாழ்வில் உண்டாகும் துன்பம் தொல்லை யாவும் அடியோடு அகலும். குலம்தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும்.  மேம்பாடும் நற்புகழும் உண்டாகும். அஷ்டமாசித்திகள் கை கூடும்.

தனக்கு மேல் வேறு ஒரு தலைவன் இல்லை என்ற ஒப்பற்ற தனிப் பெருந்தலைவனே ! கஜமுகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தவனே !
அற்புதம் நிகழ்த்துபவனே !
மோதகம் ஏந்தியவனே !
சந்திரனைத் தலையில் சூடியவனே !
உயிர்களை முக்தி நெறியில் செலுத்துபவனே !
உன்னை நம்பும் அடியவர்களின் தீவினை களைப் போக்கி கருணை காட்டும் கணபதியே !
உம்மை வணங்குகிறேன். தேவாதிதேவனே !
பாமரர்களின் அறியாமையைப் போக்குபவனே !
வல்லமை நிறைந்தவனே !
ஆனைமுகனே !
கருணை மிக்க இதயம் கொண்டவனே !
அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் பரம்பொருளே !

எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும் பாக்கியத்தை அருள்வாயாக.

ஓங்கார வடிவினனே !
கருணாமூர்த்தியே !
பொறுமை, மகிழ்ச்சி, புகழ் மிக்கவனே !
எல்லா உயிர்களும் மகிழும்படி நன்மை அருள்பவனே !
பணியும் அன்பர்களின் பிழை பொறுப்பவனே !
அடியார் வேண்டும் வரம் தந்தருள்பவனே !
நித்ய வடிவினே !
உன்னை வணங்குகிறேன். கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப் பெருமானே ! சிரிப்பாலே திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் புதல்வனே !
பக்தர்களின் துயர் களைபவனே !
ஊழிக் காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே !
செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணைநிற்கும் ஆதிபரம்பொருளே !
உன்னை சரணடைந்து போற்றுகின்றேன். ஒற்றைக் கொம்பனே !
கணபதீஸ்வரா !
சிவ பெருமானின் பிள்ளையே !
ஆதிஅந்தமில்லாதவனே !
துன்பம் துடைப்பவனே !
யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே !
உன் திருவடிகளை எப்போதும் திருவடியில் வைத்து சிரம் தாழ்த்தி வணங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக

One response to “தனது தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...