காங்கிரஸில் இருந்து வகேலா விலகியதால் பாஜகவுக்கே சாதகம்

மூத்த அரசியல் தலைவர் வகேலா காங்கிரஸ் கட்சியில்இருந்து விலகியது குஜராத்தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார். மத்திய குஜராத் பகுதியில் குறைந்தது 40 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத்சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 9-ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அடுத்தகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரபிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.


பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் என தேசியத் தலைவர்கள் அனைவரும் அங்கு முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 


மத்திய குஜராத்தைப் பொருத்தவரை 61 தொகுதிகள் உள்ளன. அங்கு காங்கிரஸ் – பாஜக இடையே கடும்போட்டி நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப்பகுதியில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சியே மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்றும் கூறப் படுகிறது. மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வகேலாவுக்கு மத்திய குஜராத்தில் செல்வாக்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில், அவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்தமுடிவை எடுத்தார்.


இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், 'வகேலா காங்கிரஸில் இருந்து விலகியது தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும்' என்றார். மேலும், மத்திய குஜராத்தில் இம்முறை அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...