மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்கவில்லை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்கவில்லை' என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மாநிலங்களவையில் புதன்கிழமை விளக்கமளித்தார். இதையடுத்து, கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்ற முடக்கத்துக்கு காரணமாக இருந்த அந்தப்பிரச்னை முடிவுக்கு வந்தது.


முன்னதாக, குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது, 'குஜராத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க பாகிஸ்தானுடன் இணைந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் சதிசெய்தனர்; பாகிஸ்தான் அதிகாரிகளுடன் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் இதுதொடர்பாக ஆலோசித்தனர்' என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.


இந்த விவகாரம் நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. மன்மோகன்சிங் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய மோடி, பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும் அல்லது தனது குற்றச்சாட்டு குறித்து அவர் உரியவிளக்கம் அளிக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் வலியுறுத்தியது. இதனால் நாடாளுமன்ற அலுவல்கள் கடந்தவாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டன. இதில் மாநிலங்களவை முற்றிலுமாக முடங்கியது.

இந்நிலையில், இரண்டுநாள் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் புதன் கிழமை மீண்டும் கூடியது. அப்போது இது தொடர்பாக விளக்கமளித்து அருண்ஜேட்லி கூறியதாவது:முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்டுப் பற்றை பிரதமர் மோடி விமர்சிக்க வில்லை. அவரது தேசப்பற்று குறித்து எந்தக்கேள்வியையும் எழுப்பவில்லை. மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி ஆகிய இரு தலைவர்கள் மீதும் மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளோம்.

நமது நாட்டுக்காக அவர்கள் பணியாற்றியுள்ளார்கள். இதுதொடர்பாக எழுந்த சர்ச்சைகள் முற்றிலும் தவறானவை. தேர்தலின் போது அனைத்துத் தரப்பில் இருந்தும் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவை தொடர்பான சர்ச்சைகள் நீடிப்பதை மத்திய அரசு விரும்ப வில்லை என்றார்.

அருண் ஜேட்லிக்கு பதிலளித்து மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:
கடந்த பலநாள்களாக மாநிலங் களவையில் நீடித்து வந்தப்பிரச்னைக்கு தீர்வு கண்டதற்காக மாநிலங்களவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், குஜராத் தேர்தலின் போது எங்கள் கட்சி உறுப்பினர் (மணிசங்கர் அய்யர்), பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துதெரிவித்ததை அடுத்து, அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தோம். பிரதமர் குறித்து இதுபோன்ற விமர்சனங்களை ஏற்பதில்லை என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...