காங்கிரஸ் கட்சிக்கு இங்கே போராடுவதற்கு எந்த உரிமையும் இல்லை

காவிரி உரிமை நிச்சயம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும், 50 ஆண்டுகளாக பல்வேறு தவறுகளால், தடங்கல்களால் படிப்படியாக நமது உரிமைகள் தடைப்பட்டது என்பது உண்மை இன்று மத்திய அரசு கேரளமும், கர்நாடகாவும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தாலும் மார்ச் 8 ஆம் தேதி மத்திய நீர் வள துறை செயலாளர் கூட்டிய கூட்டத்தில் கேரளா தனது பதிலை தெளிவாக தெரிவித்தது. 23 ஆம் தேதி அதன் பிறகு மத்திய அரசுக்கு ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாததை மட்டுமல்லாமல் இவர்களின் கடுமையான எதிர்ப்பினாலும் மேலாண்மை வாரியம் என்று உச்சநீதி மன்றம் சொல்ல வில்லை என்று இரண்டு மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்தாலும் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தின் தெளிவிற்கு செல்ல நேர்ந்தது.

 

அது மட்டுமல்ல உச்சநீதி மன்றமும் நாங்கள் "Scheme" என்று தான் சொன்னோம் என்கிறார்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பை தெரிவித்த கேரள கம்யூனிஸ்ட் அரசை எதிர்க்காமல் அதே கம்யூனிஸ்டுகள் இங்கே காவிரி உரிமைக்காக போராடுகிறேன் என்று சொல்வதற்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை. அதே போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இங்கே போராடுவதற்கு எந்த உரிமையும் இல்லை, அவர்களை கூட்டணியில் இருந்தும் நிர்பந்திக்காத ஸ்டாலினுக்கும் இங்கு போராடுவதற்கு உரிமை இல்லை, அலைகிறார்கள் ஆட்சியில் இருக்கும் போது கோட்டை விட்டுட்டு இன்று கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற காரணத்திற்க்காக பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் போராட்டங்களை முன்னெடுத்து செல்ல இந்த கட்சிகளுக்கு எந்த உரிமையும் இல்லை.

 

இன்று தேர்தலுக்காக தானே இந்த தாமதம் என்ற உண்மையில்லாத குற்றச்சாட்டுகளை காட்டும் எதிர் கட்சிகள், மேகதாதுவில் அணை கட்டுவோம் அதற்கு 6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் சித்தராமையாவை ஏன் கண்டிக்கவில்லை? ஏன் இந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று திமுக சொல்லவில்லை?

 

ஆக கூட்டணிக்காக காவிரி பிரச்னையை நீங்கள் பாரபட்சமாக அணுகுறீர்கள் என்று ஸ்டாலினை குற்றம் சாட்டுகிறோம், இது சட்டரீதியான நகர்வுகள் இருக்கும்போது மத்திய அரசு கேட்டிருக்கும் நியாமான விளக்கம் கேட்ட வழக்கு 9 ஆம் தேதி வருகின்ற நிலையில் நாளொரு போராட்டத்தை நடத்துவது அரசியல் சுயலாபம், இதை தமிழக மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

 

அதுமட்டுமல்ல விரைவில் தீர்க்கப்பட இருக்கின்ற ஒரு பிரச்சனையை ஏதோ நிரந்தரமாக காவிரி வரப்போவது இல்லை என்பதை போல ஒரு தோற்றத்தை மக்களுக்கு கொடுத்து போராட்டத்தை நடத்துகிறார்கள், திமுக உள்ளிட்ட கட்சிகள், அதிமுக நடத்திய உண்ணாவிரதம் அதன் பாஜக ஆதரவு என்ற உண்மை முகத்தை வெளிப்படுத்தினார் என்று சொல்லும் அண்ணன் ஸ்டாலின் அவர்களே அந்த உண்ணாவிரதத்தில் உங்கள் பொய் முகம் வெளிப்பட்டது என்பது தான் உண்மை.

 

ஆக ஆண்டாண்டு காலமாக வஞ்சனை செய்த கட்சிகளே இன்று போராடுகிறார்கள் ஆனால் உண்மையான தீர்வு காணவில்லை. நம் உரிமை சில நாட்கள், சில வாரங்களுக்குள் கிடைத்து விடும் என்பது தான் உண்மை.

 

உரிமை கிடைத்து விடும், ஆனால் அது கிடைக்கக் கூடாது என்றும் கிடைத்தால் சொந்தம் கொண்டாடுவதற்குமான சுயநல அரசியலே இது திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரங்கேற்றி கொண்டிருக்கிறது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள், அது மட்டுமல்ல உச்சநீதி மன்றம் "Scheme" அதாவது செயல் திட்டம் என்று சொன்ன பின்பும் ஏன் ஆணையம் அமைக்கவில்லை என்று போராடும் திமுக போன்ற கட்சிகள் மீது தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் ஆக சில தினங்களுக்குள் கிடைக்க வேண்டிய உரிமையை நிரந்தர தீர்வை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஓர் நெடு நாளைய பிரச்னையை நிரந்தரமாக தண்ணீர் கிடைக்காது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்து மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கும் கட்சிகளை கண்டிக்கிறோம். 

நன்றி டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...